திருச்சி : திருச்சியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வட மாநில வாலிபரை கொலை செய்த இருவரை, போலீசார் தேடுகின்றனர்.
அப்போது, பழக்கமான பாலா, கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, நேற்று மதியம், மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், மூவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில், பாலாவும், கணேசனும் சேர்ந்து, விக்ரமை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயம் அடைந்த விக்ரம், சம்பவ இடத்தில் இறந்தார். கோட்டை போலீசார், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.