North state teenager killed in drunken dispute | போதையில் தகராறு வட மாநில வாலிபர் கொலை | திருச்சி செய்திகள் | Dinamalar
போதையில் தகராறு வட மாநில வாலிபர் கொலை
Added : பிப் 08, 2023 | |
Advertisement
 



திருச்சி : திருச்சியில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், வட மாநில வாலிபரை கொலை செய்த இருவரை, போலீசார் தேடுகின்றனர்.



திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை முன் உள்ள தனியார் ஹோட்டலில், வட மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம், 34, என்பவர் வேலை செய்தார். வீடு ஏதும் இல்லாததால், பிளாட்பாரத்தில் படுத்து துாங்கினார்.

அப்போது, பழக்கமான பாலா, கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, நேற்று மதியம், மது குடித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், மூவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில், பாலாவும், கணேசனும் சேர்ந்து, விக்ரமை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயம் அடைந்த விக்ரம், சம்பவ இடத்தில் இறந்தார். கோட்டை போலீசார், தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X