கோவை : மங்களூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே இன்ஜினியரிங் பணிகள் நடப்பதால் கோவை வழியாக செல்லும் திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ஹிசார் - கோவை வாராந்திர ரயில்(22475), பிப்., 8, 15, 22 மற்றும் மார்ச், 1ம் தேதிகளில் வழக்கமான வழித்தடத்தில் இயக்காது, புனே, சோலாப்பூர், வாடி, ராய்ச்சூர், குண்டக்கல், தர்மவரம், கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட்டை, சேலம் வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும்.
இதேபோல், கோவை - ஹிசார் ரயில்(22476) பிப்., 11, 18, 25 ஆகிய மூன்று நாட்கள் சேலம், பங்காரபேட்டை, கிருஷ்ணராஜபுரம், தர்மவரம், குண்டக்கல், ராய்ச்சூர், வாடி,சோலாப்பூர், புனே, வசை ரோடு வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.