மூக்கை பொத்தி; கண்ணை மூடி வாகனம் ஓட்டணும்! தாமரைக்குளத்தில் ஓட்டுனர்கள் தடுமாற்றம்
Added : பிப் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாமரைக்குளம் கிராமத்தில் நான்கு வழி சாலையின் அருகில், குப்பை குவிப்பதாலும், தீ வைத்து எரிப்பதாலும், விபத்து அபாயம் நிலவுகிறது.



கோவை --- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளம் கிராமத்தில், 1வது வார்டில், குப்பை கொட்டப்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டாமல் இருக்க, அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே இடத்தில் குப்பை தொட்டியம் உள்ளது.

அறிவிப்பையும் மீறி, அங்கு அளவுக்கு அதிகமாக குப்பை கொட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது. இதனால், அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

அதேபகுதியில், அங்குள்ள பாலத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், ஒட்டு மொத்த சுகாதாரமும் பாதித்துள்ளது. அவ்வழியாக பாதசாரிகள் நடந்து செல்ல முடிவதில்லை.

அங்குள்ள ஓடையில், கோழி இறைச்சி கழிவு மூட்டையாகவும், குப்பையும் குவிக்கப்பட்டுள்ளதால், ஓடையில் தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. கேரள நோக்கி செல்லும் ஓடையில், கழிவு தேங்கியுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.

அங்கு, குப்பை தரம் பிரிக்காமல் குவிக்கப்பட்டுள்ள நிலையில், குப்பை தொட்டியுடன் சேர்த்து தீ வைத்து எரிகின்றனர். அங்கு ஏற்படும் புகையால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை முழுதும் பரவும் புகையால், வாகன ஓட்டுனர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. காற்றில் பறக்கும் சாம்பல் போன்ற துாசிகளால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். அங்கு, காற்று மாசுபடுவதுடன் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இப்பிரச்னைக்கு ஊராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.



சுகாதாரமில்லை




பொதுமக்கள் கூறுகையில், 'குப்பையை அகற்றக்கோரி பலமுறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. இங்குள்ள பிரச்னையை பார்வையிட ஊராட்சி தலைவர் கார்த்திகா இதுவரை வந்ததே கிடையாது.

- அடிப்படை வசதிகள், ரோடு, கழிவுநீர் கால்வாய் போன்றவை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தொகுதி நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்டது. துாய்மை பணியாளர்கள் குப்பையை சுத்தம் செய்ய இந்த பகுதிக்கு வருவதில்லை,' என்றனர்.



நடவடிக்கை இல்லை




வார்டு கவுன்சிலர் செந்தமிழ்செல்வி கூறுகையில், 'குப்பை கொட்டப்பட்டுள்ள பகுதியில், 25 குடும்பகளுக்கு மேல் வசிக்கின்றனர். குப்பையை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகையால், மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

குப்பையை அகற்றக்கோரி, ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை சரி செய்ய போதிய நிதி இல்லை என தெரிவிகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுவது கிடையாது,' என்றார்.



15 நாட்களில் தீர்வு




ஊராட்சி தலைவர் கார்த்திகா கூறியதாவது:

ஊராட்சியில் போதிய நிதியில்லை. துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. ஊராட்சிக்கு தேவையான குப்பை வண்டிகள், குப்பை தொட்டி வாங்குவதற்கு கூட நிதி இல்லை.

ஊராட்சியின் மொத்த வரி வசூல், 15 லட்சம் மட்டுமே. இந்த தொகையை கொண்டு எந்த பணியையும் செய்ய முடியவில்லை. துாய்மை பணியாளர்களுக்கும் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுவதால் வேலையும் சரிவர நடப்பதில்லை. வருவாயை அதிகரிக்க, நடப்பாண்டில் இருந்து, 10 முதல் 15 சதவீதம் வரி ஏற்றப்படும்.

தாமரைக்குளத்தில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு காண, இன்னும், 15 நாட்களில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X