மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1ல் மக்கள் குறைதீர் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் தலைமையில் நடந்தது.
முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம், புதிய வரி விதிப்பு, திருத்தம், காலிமனை வரி விதிப்பு, ஆக்கிரமிப்பு உட்பட ஏராளமான மனுக்களை மேயர் பெற்றார். சென்ற முகாமில் இவைதொடர்பாக விண்ணப்பித்தோருக்கு அனுமதி ஆணையினை மேயர், கமிஷனர் வழங்கினர்.
மண்டலத் தலைவர் வாசுகி, உதவி கமிஷனர் காளிமுத்தன், நிர்வாக அலுவலர் ரங்கராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.