மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த முதல்வர் கோப்பை கல்லுாரி மாணவர்களுக்கான குழுப்போட்டி முடிவுகள்: ஆடவர் கூடைப்பந்து போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி முதலிடம், அமெரிக்கன் கல்லுாரி 2ம் இடம், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி 3ம் இடம், மகளிர் பிரிவில் லேடிடோக் கல்லுாரி முதலிடம், பாத்திமா கல்லுாரி 2ம் இடம், யாதவர் கல்லுாரி 3ம் இடம் பெற்றன.
கபடி ஆடவர் பிரிவில் அமெரிக்கன் கல்லுாரி, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, வக்போர்டு கல்லுாரி, மகளிர் பிரிவில் மங்கையர்க்கரசி கல்லுாரி, பாத்திமா கல்லுாரி, மீனாட்சி அரசு கல்லுாரி முதல் மூன்று இடங்களைப் பெற்றன. வாலிபால் ஆடவர் பிரிவில் அமெரிக்கன், மதுரை அண்ணா பல்கலை மண்டல மையம், மங்கையர்க்கரசி, மகளிர் பிரிவில் அமெரிக்கன், சத்திரப்பட்டி அமெரிக்கன் கல்லுாரி, யாதவர் கல்லுாரி முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
ஹாக்கி ஆடவர் பிரிவில் அமெரிக்கன், அருளானந்தர் கல்லுாரி, சவுராஷ்டிரா கல்லுாரி, மகளிர் பிரிவில் அமெரிக்கன், லேடிடோக், பாத்திமா கல்லுாரி முதல் மூன்று இடங்களை வென்றன. கால்பந்து ஆடவர் பிரிவில் அமெரிக்கன், சரஸ்வதி நாராயணன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மகளிர் பிரிவில் லேடிடோக், பாத்திமா, மீனாட்சி அரசு கல்லுாரி முதல் மூன்று இடங்களை வென்றன.