ஈரோடு: ''குபேர மூலையில் பிரசாரத்தை துவக்கியுள்ளதால், வெற்றி எங்களுக்கே,'' என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக தென்னரசு உறுதியாகி, அதற்கான படிவங்கள் நேற்று காலை வந்தன. மனுத்தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர் படிவம், ஏ, பி படிவங்களை, மணல்மேடு முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் வைத்து அ.தி.மு.க.,வினர் வழிபாடு நடத்தினர்.
சிறப்பு பூஜைக்குப்பின், அங்கேயே பிரசாரத்தை துவக்கினர். அப்போது முன்னாள் அமைச்சர்
செங்கோட்டையன் கூறியதாவது: வேட்பாளர் தென்னரசின் முதற்கட்ட பிரசாரம், குபேர மூலையில் துவக்கியதால், வெற்றி, செல்வம் கிடைக்கும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல, இந்த இடைத்தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றி, திருப்பு முனையை பெற்றுத்தரும். இவ்வாறு கூறினார்.