கரூர்: பா.ஜ.,வில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியாக அ.தி.மு.க., உள்ளது,'' என, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் நேற்று நடந்த, கட்சியின்,15ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கான நிதி திட்டங்கள், 34 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. காங்.,- எம்.பி., ராகுல் நடத்திய பாத யாத்திரை, மதசார்பற்ற அனைத்து தரப்பினருக்கும், புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால், பா.ஜ.,வை வீழ்த்த முடியும். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் வைப்பது தேவையானது. அதே நேரம், அறிஞர்களின் கருத்துகளை கேட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத வகையில், நினைவு சின்னம் வைக்க வேண்டும். பா.ஜ.,வில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியாக அ.தி.மு.க., உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.