இதுகுறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:
தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷன் முன்பு செயல்பாட்டில் இருந்தது. ஏழு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள கரூர் டவுன் ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்படுவதால், நாளடைவில் தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நிற்காமல் சென்றன. இதனால் இந்த ரயில்வே ஸ்டேஷன் பாழடைந்துள்ளது.
இங்கு ரயில்கள் நிற்காததால், தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளியணை அல்லது கரூர் டவுன் ஸ்டேஷனுக்கு சென்று ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் வெள்ளியணையில் இருந்தும், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும், தான்தோன்றிமலைக்கு பஸ் வசதி கிடையாது. இதனால் இரவு நேர ரயில்களில் வரும் தான்தோன்றிமலை பகுதி பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், நீதிமன்றங்கள், அரசு கலை கல்லுாரி, அரசு அலுவலர் குடியிருப்புகள் உள்ளதால் தான்தோன்றிமலை முக்கிய பகுதியாக திகழ்கிறது. எனவே, தான்தோன்றிமலை ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.