ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு உட்பட, 37 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தேர்தலில் கடந்த, 31 முதல் நேற்று முன்தினம் வரை, 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இறுதி நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கலுக்கு வந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் மனுக்களை பெற்றார்.
நேற்று, அ.தி.மு.க., வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு,71, அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி டி.பத்மினி,70, சுயேட்சையாக அவரது மகன் கலையரசன்,40, ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
மேலும், ஈரோடு பழனிசாமி,54, பால்ராஜ்,46, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதகாப்பு பிரிவு மாநில தலைவர் (பொறுப்பு) ஆர்.சதீஷ்குமார்,44, மா.தரணிகுமார்,28, மதுரை வீரன் மக்கள் விடுதலை இயக்கம் பி.ஆறுமுகம்,60, தமிழ்நாடு தெலுங்கு திராவிட முன்னேற்ற ஒற்றுமை கிழகம் பென்னாகரம் கே.ஏ.மனோகரன்,45, கோபாலகிருஷ்ணன்,41, பிரதாப்குமார்,57, லோகேஷ்,34, எஸ்.சித்ரா,40, சுதாகர்,32, சங்ககிரி பி.கே.சங்கர்,62, இந்திய திராவிட மக்கள் கட்சி அவினாசி அண்ணாதுரை,49, இந்து பறையர் சங்கம் பிரபாகரன்,48, செந்தில்குமார்,42, குமாரபாளையம் குணசேகரன்,62. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எஸ்.ராஜா,41, ஈரோடு இளங்கோ,44, திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருமலை,51, திருச்செந்துார் குமாரசாமி,70, ஈரோடு சீனிவாசன்,38, அனுப்பர்பாளையம் சசிகுமார்,30, பெத்தநாயக்கன்பாளையம் ராஜேந்திரன்,39, சென்னை தண்டையார்பேட்டை கண்ணன்,37, ஈரோடு கார்த்திகேயன்,62, மயில்வாகனன்,32, ஜெய்சங்கர்,45, சேலம் சக்திவேல்,38, திருப்பூர் அருண்குமார்,28, கோத்தகிரி ராம்குமார்,26, சேலம் பத்மநாபன்,63, விழுப்புரம் முகமது அலி ஜின்னா,64, மதுரை வாடிபட்டி மாரியப்பன்,53, ஈரோடு சுரேஷ்,34, என மொத்தம், 37 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் வரை, 59 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று, 37 வேட்பாளரின் தனி வேட்பு மனுவுடன், தென்னரசு உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்ததால் மொத்தம், 108 வேட்பு மனுத்தாக்கலாகி உள்ளது.
இன்று மதியம், 3:00 மணி வரை வேட்பு மனு பரிசீலனையும், வரும், 10 ல் வேட்பு மனு வாபஸ் பெறுதலும் நடக்கிறது. அன்று மதியம், 3:00 மணிக்கு இறுதி வேட்பாளர் விபரம், அவர்கள் சார்ந்த கட்சி அல்லது சுயேட்சை என்பதுடன், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் பட்டியல் வெளியிடப்படும்.