நாமக்கல்: நாமக்கல் பொம்மைகுட்டை மேடு, காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்தனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தினம், பாரதியார் தினத்தையொட்டி, மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சிவகங்கை மாவட்டத்தில் நடந்தது. போட்டியில் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பிளஸ் 2 மாணவி கேசிகா மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து, வெள்ளி பதக்கம் பெற்றார். பிளஸ் 1 மாணவன் அருனேஷ், பத்தாம் வகுப்பு மாணவன் கிருபன், எட்டாம் வகுப்பு மோனீ, பிளஸ் 2 மாணவி கவுசிகா ஆகியோர் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனர்.
மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவியர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், காமராஜர் கல்வி நிறுவன தலைவர் நல்லதம்பி பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினார். மேலும், இயக்குனர்கள் அல்லிமுத்து, மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள் காளியண்ணன், பழனிசாமி, முதல்வர்கள் சுதா, கீதா, கோபாலன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவ, மாணவியரை பாராட்டினர்.