ஒகேனக்கல்: ஒகேனக்கல்லில், வெள்ளப் பெருக்கின்போது ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யாத நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக் கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந் தும் ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றனர். கடந்த, ஆக., செப்., மாதங்களில் ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள் ளப்பெருக்கால், அத்திமரத்துக டவு பகுதியிலிருந்து ஐந்தரு விக்கு செல்லும் நடைப்பாதை, மெயினருவிக்கு செல்லும் நடைப்பாதை, சினி பால்ஸ் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் சேதமடைந்தன.
இதனால், சின்னாறு பரிசல் துறையிலிருந்து பரிசல்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினா டிக்கு, 1,000 கன அடியாக குறைந்ததால், சின்னாறு பரிசல் துறையிலிருந்து மாற்றி, வழக்க மான அத்திமரத்துகடவு பகுதியில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சேதமடைந்த நிலையிலுள்ள ஒகே னக்கல் சினி பால்ஸில் குழந்தைகள், பெண்கள் குளிக்க பாதுகாப்பாக இருந்த தடுப்பு கம்பிகள், ஐந்தருவிக்கு செல்லும் நடைப்பாதை மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வரு கின்றனர். எனவே, அவர்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல்லில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.