திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின், மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை துாய்மையாக பராமரிக்கும் வகையில், தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மாநகராட்சி கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்தும், பொதுமக்கள் நலன்கருதி, தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பிரதான நுழைவாயில் அருகே, சில தள்ளுவண்டி இரவு நேர உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி உத்தரவை மீறி, திடீரென முளைத்துள்ள கடைகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.