திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டாச்சார்யார்களுக்கான புத்தொளி பயிற்சி, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று துவங்கியது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் (பொறுப்பு) செந்தில் குமார் தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் சரவணபவன், ஆய்வாளர் கணபதி ஆகியோர் முன்னிலையில், பட்டாச்சார்யார்களுக்கான புத்தொளி பயிற்சி நேற்று துவங்கியது.
இந்த பயிற்சி, தினமும் மதியம், 2:00 மணி முதல், 4:00 வரை, மார்ச் 22ம் தேதி வரை நடக்கும்என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் எட்டு பேர் மட்டுமே நேற்று வந்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாச்சார்யார்களையும் ஒருங்கிணைத்து, புத்தொளி முகாம் நடத்த வேண்டும்; சம்பிரதாய சடங்கு போல் நடத்த வேண்டாம் என, பட்டாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.