பண்ருட்டி:புதுப்பேட்டையில், அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் இரு பிரிவினர்களாக, சமீபத்தில் மோதிக்கொண்டனர்.
இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். மாணவர்கள் மோத காரணமாக இருந்ததாக கூறி, முன்னாள் தலைமை ஆசிரியர் காமராஜ், புவியியல் ஆசிரியர் வீரவேல், வரலாறு ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவின் படி, ஆசிரியர்கள் வீரவேல், சீனிவாசன் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.