ஆரணி:ஆரணியில் போலீசாரை அவதுாறாக பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மேலும் 7 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சின்னக்கண்ணு என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து ஆக்கிரமித்த வி.சி. நிர்வாகி ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் போலீசாரை அவதுாறாகபேசினார். இதனால் அவர்கள் இருவரும் கைதாகி பின் ஜாமினில் வந்தனர். கடந்த 26ல் இருவரும் தங்கள் கட்சியினருடன் ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் கூடி போலீசாரை ஆபாசமாக பேசினர். ஆரணி டவுன் போலீசார் 12 பேரை கைது செய்தனர்.
நேற்று முன்தினம் மாலை மேலும் ஏழு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாவட்ட செயலர் பாஸ்கரன் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.