விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் பிப்.10 முதல் துவங்க உள்ளதால், விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட பிரிவில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 10.02.2023 முதல் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்கான இடம், விளையாட்டுகள் போன்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்துக்கொள்பவர்கள், தங்கள் பதிவு செய்த தனிநபர் மற்றும் குழு விளையாட்டு விண்ணப்பத்தின் நகல், ஆதார் அட்டை நகல், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் கையொப்பம் இட்ட நுழைவு படிவம், பள்ளி, கல்லூரி படிக்கும் அடையாள அட்டை, வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் போட்டி நடைபெறும் நாட்களில் காலை 7:00 மணிக்கு ஆஜராகிட வேண்டும். அரசு ஊழியர்கள் தங்கள் பணிபுரியும் துறை அடையாள அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கி புத்தக நகல்சமர்ப்பிக்க வேண்டும்.
பொது பிரிவினர் தங்கள் ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டை நகல் மற்றும் வங்கி புத்தக நகல் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாதவர்கள் இப்போட்டிகளில் கலந்துக்கொள்ள முடியாது. எனவே, பதிவு மேற்க்கொண்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு, கலெக்டர் பழனி அறிவுறுத்தியுள்ளார்.