திண்டிவனம்-திண்டிவனம் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயமடைந்தவனர்.
திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் சேட்டு (எ) ஜெயக்குமார், 23;. திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ், 48; இவர் கடந்த 6ம் தேதி, திண்டிவனம் எம்.ஆர்.எஸ்., கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கும் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
உடன் மோகன் தாஸ், அவரது மகன் மணிகண்டன் (எ) ஸ்பீடு மணி, 25; என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த மணிகண்டன், சேட்டை தாக்கியுள்ளார்.
இதே போன்று சேட்டு, கையில் வைத்திருந்த மதுபாட்டிலால், மோகன்தாஸ், மணிகண்டன் ஆகியோரை தாக்கியுள்ளார்.இதில் 3 பேரும் காயமடைந்தனர்.
இரு தரப்பு புகாரின் பேரில் மோகன்தாஸ், மணிகண்டன், சேட்டு ஆகியோர் மீது திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.