கோவை : கோவை மாநகராட்சி, 18வது வார்டு சங்கனுார் சாலை முதல் நல்லாம்பாளையம் சாலை வரை, தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் பேஸ்-1ல் ரூ.75 லட்சத்தில், 1,020 மீட்டர் நீளத்துக்கு தார் சாலை அமைப்பதற்கு ஈர கலவை போட்ட இடத்தையும், மழை நீர் வடிகால் கட்டுமானத்தையும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு செய்தார்.
சங்கனுார், நல்லாம்பாளையம், ராஜிவ்காந்தி ரோடு பகுதியை பார்வையிட்ட கமிஷனர், ஆக்கிரமிப்பை அகற்றி, பிரதான சாலையில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க உத்தரவிட்டார்.
அத்திப்பாளையம் சாலை முதல் ரவீந்திரநாத் தாகூர் சாலை வரை ரூ.1.58 கோடியில், 1,420 மீட்டர் நீளத்துக்கு புதிதாக போடப்பட்ட தார் சாலை, 28வது வார்டு ஆவாரம்பாளையம், மகாத்மா காந்தி சாலையில் ரூ.83.90 லட்சத்தில், 1,010 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்ட தார் சாலையின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார்.
அப்போது, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.