திண்டுக்கல் மாவட்டத்தில் தெருவிளக்குகளுக்காக முக்கிய பகுதியில் மின் பெட்டி நிறுவப்பட்டு உள்ளாட்சிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுவிட்ச் ஆன், ஆப் செய்யும் பணியை தெரு மக்களே செய்கின்றனர். சில இடங்களில் இதன் பெட்டி தாழ்வாகவும், திறந்த நிலையில் உள்ளதால் சிறார்கள் பாதிக்கின்றனர். மின் பெட்டி உள்ள மின்கம்பம் புதர்களுடன் உள்ளதால் சுவிட்ச் ஆன், ஆப் செய்வோர் ஒரு வித பீதியில் இப்பணியை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் புதர்களை அகற்றுவதோடு,மின்துறையும் பெட்டியை பாதுகாப்புடன் அமைக்க வேண்டும்.