நத்தம்--நத்தம் பாப்பாபட்டி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குட ஊர்வலம் நடந்தது.
தீர்த்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, நவகிரக ஹோமம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
நேற்று நாடி சந்தானம், விசேஷ சாந்தி, திரவிய ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை உள்ளிட்ட இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம்,சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களின் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது கருடன் வானத்தில் வட்டமிட பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனி குமார், இஸ்மாயில், கண்ணன், ஊர் நாட்டாமை சேது நாகராஜன், கணேசன் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.