ஒட்டன்சத்திரம்--ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையேயான சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் யோகா வரவேற்றார். சக்தி கல்வி குழுமத் தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி பேசினார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பெரியகுளம் திரவியம் கலை அறிவியல் கல்லுாரி மாணவிகள் வென்றனர். இரண்டாம் ஆண்டு முதுகலை கணினி அறிவியல் துறை மாணவி பெனாசீர் பானு நன்றி கூறினார்.