வைகை ஆற்று பாசனம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3000 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா பயிர் சாகுபடியில் மூன்று மாதங்களுக்கு தண்ணீர் வைகை அணையில் இருந்து கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த மாதத்துடன் தண்ணீர் கொடுக்கும் தவணை முடிவடைந்து விட்டதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தான் நெல் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால் நீரினை நிறுத்தினால் பயிர்கள் காய்ந்து விளைச்சல் எடுக்க முடியாது என புலம்புகின்றனர்.
விவசாயிகளின் நலன் கருதி நெற்பயிரை காப்பதற்காக பொதுப்பணித்துறையினர் முறை வைத்து மூன்று முறை தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுப்பது அவசியமாகிறது.