ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட பல கோடி ரூபாய் தங்க கட்டிகள்: ஸ்கூபா டைவிங் மூலம் தேடுதல் தீவிரம்
Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் கடத்தல்காரர்கள் வீசிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.



latest tamil news



இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுதுறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை ராமேஸ்வரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகுகள் மூலம் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது நாட்டுப்படகில் தங்க கட்டியுடன் வந்த கடத்தல்காரர்கள் புலனாய்வு துறையினரை கண்டதும் தங்க கட்டி பார்சலை கடலில் வீசினர். கடத்தல்காரர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மண்டபம் பகுதியை சேர்ந்த நாகூர் கனி, மன்சூர் அலி, அன்வர் என தெரிந்தது.

இலங்கை கடலில் அந்நாட்டு கடத்தல்காரர்கள் படகில் கடத்தி வந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டி பார்சலை நடுக்கடலில் காத்திருந்து வாங்கி மண்டபம் கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

கடலோர காவல் படையின் ஸ்கூபா நீச்சல் பயிற்சி வீரர்களை வரவழைத்து தங்க கட்டிகளை கடலில் நேற்று மாலை 5:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. இரவில் தேடும் பணியை நிறுத்தி வைத்து, இன்று தேட முடிவு செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202316:59:36 IST Report Abuse
Girija இந்த அதிகாரிகளுக்கு பேப்பர் படிப்பது அல்லது டி வீ போன்றவற்றை பார்த்து பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் திறன் இல்லை போல் உள்ளது இல்லை ராஜேஷ்குமார் கதையில் வந்தது போல் உள்ளே போன லட்ச ருபாய் வஸ்து காரணமோ ?. சைனாவின் பலுனை எப்படி? எதற்கு? கடல் பகுதிவரை கண்காணித்து அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது என்பதை அறிந்திருந்தால் கூட இப்படி முள் ஆல் எடுக்க வேண்டியதை கோடாலி கொண்டு பிளந்திருக்கமாட்டார்கள். இப்போது கப்பலில் பாதி பாக்கு என் பாக்கு என்றாகிவிட்டது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
09-பிப்-202314:28:25 IST Report Abuse
duruvasar பிடிபட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் தமிநாடு அரசியல் வியாதிகள் குரல் எழுப்புவார்கள்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202311:24:35 IST Report Abuse
Girija கஸ்டம்ஸ் சூரர்கள், சிறிதும் அறிவில்லாமல் சினிமா போல் ஸ்டண்ட் அடிக்க போய் உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா கதை ஆகிவிட்டது. மேல் நோக்கி வீசிய பந்து புவி ஈர்ப்பினால் கீழே வந்துதான் ஆக வேண்டும் என்ற நியூட்டன் கோட்பாடு கூட அறியாத அறிவு ஜீவிகள். கடத்தல்காரர்கள் வருகின்றனர் என்ற தகவல் முன்கூட்டியே கிடைத்துள்ளது சரி, அப்படி வருபவர்கள் எப்படியும் கரையை அடைந்தே ஆகவேண்டும். ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கவில்லை, விளம்பர மோகம் சினமா பாணியில் என்று செய்தி வரவேண்டும். இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள்? மொத்தமும் அம்பேல். குல்லா குரங்கு கதை கூட படிக்காதவர்கள். இவர்கள் வீரசாகஸத்தை விமான நிலையத்தில் பார்க்க வேண்டும், டாலர் பாட்டில் முக்கியமான தான் முக்கியமான பேப்பராக உள்ளே வைக்கணும். உடனே ஒகே இல்லாவிட்டால் மொபைல் கோர்ட் நீதிபதி எதிரில் ஆமாமாம் என்று சொன்னால் தான் கூறிவந்த அபராதம் என்கிற யுக்தி. இவர்களுக்கு இந்திய தேசிய வங்கி NRE Ruppee A/C, பணம் என்பது வெளிநாட்டு பணத்திற்கு சமமானது என்று தெரியாதாம், டாலராக நீட்டினால் தான் சலுகை டூட்டியாம். கிட்டத்தட்ட ஒரு நீதிபதிக்கு கோவிலில் நேர்ந்த அனுபவம் தான் எனக்கு ஏர்போர்ட்டில் ஏற்பட்டது. வெளிநாட்டு பணம் கொண்டுவரக் கூடாது என்ற விதிமுறை இருக்கும்போது இவர்கள் சொல்லும் வியாக்கியானம் அதிசயமாக உள்ளது. நான் கிட்டதட்ட அதிகாலை மூன்று மணிநேரம் காக்கவைக்கப்பட்டேன், இந்த சூரர்கள் ஷிப்ட்டு காலை ஆறுமணிக்கு முடிந்து போகும் போது பார்த்தால் மயக்கமே வந்துவிட்டது, ஒவ்வொருவரும் எதோ ஒருவாரம் வெளியூர் சென்று வந்தது போல் கையில் பெரிய சூட்கேஸ். அடக் கடவுளே. கொடுமை கொடுமை ன்னு. பிரதமர் அலுவலகத்திற்கு எழுதினால், விசு படம் போல என் புகார் எனக்கு அநிநாய வரி விதித்த அதே அதிகாரிக்கு அனுப்பப்பட்டு எனக்கு பதில் வருகிறது நீங்க டாலராக கையில் கொண்டுவரவில்லை, NRE a/c பணம் டாலருக்கு இணையானது என்று சட்டத்தில் கூறவில்லை அதனால் நாங்கள் செய்தது சரிதான் என்றும், அதே சமயம் உங்கள் கருத்தை பாலிசி மேக்கர் களுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று. அதுபற்றி இதுவரை ஒரு காபி மேக்கர் கூட பதில் தரவில்லை.
Rate this:
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
09-பிப்-202315:22:16 IST Report Abuse
Nellai tamilanமிகவும் சரியான கேள்வி. கரைக்கு வந்து இறங்கிய பிறகு பிடித்து இருந்தால் இவ்வளவு கஷ்டம் கிடையாது. விமான நிலையத்தில் அபராதத்தை வாங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறோம் என்று சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பணமாக கையில் மட்டுமே தரவேண்டும் என்று முரண்டு பிடிப்பார்கள்....
Rate this:
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202316:50:00 IST Report Abuse
Girijaமிகவும் நல்ல பதிவு. ஆனால் அபராதம் என்பது வேறு மறைத்து எடுத்துவருவதற்கு விதிக்கப்படுவது. வரி (டூட்டி) என்பது இறக்குமதி வரி போன்றது. வங்கி பற்றிய இவர்கள் அறிவை குறிப்பிட மறந்துவிட்டேன். கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு வங்கி டிஜிட்டலைசேஷன் பற்றிய அறிவு மைனஸ் (பூஜ்யம் என்பது மதிப்பு மிக்கது). அந்த அதிகாரி எனக்கு எழுதிய பதிலில் 2017 Customs Amendment dt.30/06/2017 படி வெளிநாட்டில் இருந்து வரும் நபர் 5000 அமெரிக்க டாலர் கையில் எடுத்துவரலாமாம். இது எப்படி இருக்கு? ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு பணம் வருவதை தடுக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வங்கிகள் டிஜிட்டலல் மயம். மறுபுறம் இப்படி. இப்படி வரும் டாலர்கள் ஒழுங்காக வங்கிகளில் சேர்கிறதா? அதை கஸ்டம்ஸ் எவ்வாறு கண்காணிக்கிறது ? என்று பதில் கேள்வி கேட்டு அனுப்பியதில் , கண்காணிப்பு இல்லை உங்கள் கருத்தை பாலிசி மேக்கர்களுக்கு அனுப்பியுள்ளோம் என்று பதில் வருகிறது, இன்றுவரை பதில் இல்லை. இந்த பதிலை பெறுவதர்கே எனக்கு ஒரு வருடம் மேல் ஆனது . முடியல ப்பா முடியல என்று இருக்கிறேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X