கோவை : மதுரை ரயில் நிலையம் அருகில் ரயில்வே பராமரிப்பு பணி நடப்பதால் பல்வேறு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
l வழக்கமாக கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு இரவு 7:00 மணிக்கு வரும் நாகர்கோவில் - கோவை (16321) ரயில் சேவை இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை பகுதி ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவில் முதல் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படுகிறது. விருதுநகர் முதல் கோவை வரை இயங்காது.
l கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காலை 8:00 மணிக்கு புறப்படும் கோவை - நாகர்கோவில் (16322) ரயில் சேவை இன்று முதல் மார்ச் 6ம் தேதி வரை கோவை முதல் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.
l கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, மதியம் 2:40 மணிக்கு புறப்படும், கோவை - மதுரை (16721) ரயில், இன்று முதல் மார்ச், 4ம் தேதி வரை கோவை முதல் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். திண்டுக்கல் முதல் மதுரை சேவை ரத்து செய்யப்படுகிறது.
l கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம், 12:15 மணிக்கு வரும் மதுரை - கோவை (16722) ரயில், இன்று முதல் மார்ச் 5 வரை மதுரை முதல் திண்டுக்கல் வரை இயக்கப்படும். திண்டுக்கல் முதல் கோவை வரை சேவை ரத்து செய்யப்படுகிறது.
l சண்டிகார் - மதுரை (12688) ரயில், பிப்., 10, 13, 17, 20, 24, 27 ஆகிய தேதிகளில் சண்டிகார் முதல் ஈரோடு வரை இயக்கப்படும். ஈரோடு முதல் மதுரை வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.
l மதுரை - சண்டிகார் (12687) ரயில், பிப்., 12, 15, 19, 22, 26 மற்றும் மார்ச் 1ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து சண்டிகார் வரை இயக்கப்படும். மதுரை முதல் ஈரோடு வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.
l ஓகாவில் இருந்து புறப்படும் ஓகா - ராமேஸ்வரம் (16734) ரயிலின் சேவை பிப்., 14, 21 மற்றும் 28 தேதிகளில் ஓகா முதல் சேலம் வரை இயக்கப்படும். சேலம் முதல் ராமேஸ்வரம் சேவை ரத்து செய்யப்படுகிறது.
l ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - ஓகா (16733) ரயில், பிப்., 17, 24 மற்றும் மார்ச், 3 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து ஓகா வரை இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் முதல் சேலம் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.