'ரெப்போ ரேட்' உயர்வால் நிறுவனங்கள் பாதிக்கும் அபாயம்
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மதுரை : ''ரிசர்வ் வங்கி 'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தை இந்த நிதியாண்டில் 6வது முறையாக 0.25 சதவீதம் உயர்த்தியதால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,'' என, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், கவுரவ செயலர் செல்வம் மதுரையில் கூறினர்.



அவர்கள் கூறியதாவது:

தொடர் வட்டிவிகித உயர்வு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களையும் தொழில் வணிக முதலீட்டையும் பாதிக்கும்.

உலகப்பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 லிருந்து 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஜி.டி.பி.,யில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை விட ஜி.டி.பி., அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் ரெப்போ வட்டி வீதத்தை மட்டும் உயர்த்தியது தொழில் வணிகத் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இதனால் வீட்டுக்கடன், வாகன, தனிநபர் கடன், நகைகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். மாதந்தோறும் செலுத்தும் தவணைத்தொகை அளவும் அதிகரிக்கும்.

ரியல் எஸ்டேட், கட்டுமானப்பணி, ஆட்டோமொபைல் துறையின் விற்பனை குறைய வாய்ப்புள்ளது.

உற்பத்தி செலவு அதிகரிப்பால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வட்டி உயர்வு, பணப்புழக்கத்தை குறைத்து விடும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த நினைக்கும் அதே நேரத்தில், இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விடக்கூடாது.

இவ்வாறு கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X