வேலுார்:லஞ்சம் வாங்கி கைதான நில அளவையாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே டி.பி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 56. விவசாய நிலத்துக்கு வரைபடம் கேட்டு விண்ணப்பித்தார்.
குடியாத்தம் நில அளவை பிரிவு தலைமை நில அளவையாளர் விஜய் கிருஷ்ணா, ௪௭, அவரது உதவியாளர் கலைவாணன் ஆகியோர் இதற்கு லஞ்சம் கேட்டனர்.
தர விருப்பமில்லாத வேலு, வேலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி, கடந்த, 9ம் தேதி, 15 ஆயிரம் ரூபாயை, அரசு அலுவலர்கள் இருவரிடமும் கொடுத்த போது, அவர்களை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சர்வேயர் விஜய் கிருஷ்ணாவை, சஸ்பெண்ட் செய்து, வேலுார் நில அளவை பிரிவு உதவி இயக்குனர் ராஜ் கணேஷ் நேற்று உத்தரவிட்டார்.