திருநெல்வேலி:திருநெல்வேலியில் சென்னையைச் சேர்ந்த நர்சிங் மாணவி உட்பட இருவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை, பழவேற்காடு பிரான்சிஸ் மகள் கித்தோரின் ஸ்மைலா, 22; திருநெல்வேலி, டக்கரம்மாள்புரம் அருகே உள்ள இதய ஜோதி நர்சிங் கல்லுாரியில், நான்காம் ஆண்டு பயின்று வந்தார்.
அவரது அறையில் ஏழு மாணவியர் தங்கியிருந்தனர். நேற்று காலை, 9:30 மணிக்கு மற்ற மாணவியர் வகுப்புக்கு சென்றதும், தனியாக இருந்த கித்தோரின் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8ம் வகுப்பு மாணவி
திருநெல்வேலி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த, 13 வயது மாணவி, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றார்.
அவர், அரையாண்டு தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.