முக்கூடல்:திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலைச் சேர்ந்தவர் சகாயம் டெவின்ராஜ், 40; சிங்கம்பாறை பள்ளியில் தொகுப்பூதிய ஆசிரியராக பணிபுரிந்தார்; டியூஷனும் நடத்தி வந்தார்.
இதற்கிடையே, டியூஷனுக்கு வந்த மாணவியரில் ஒருவரை ஏற்கனவே இவர் சில்மிஷம் செய்துள்ளார். கடந்த, 13ம் தேதி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவரிடம் இருந்து தப்பிய மாணவி, பெற்றோரிடம் புகார் கூறினார். மாணவி புகாரின் படி, முக்கூடல் போலீசார், ஆசிரியர் சகாயம்டெல்வின் ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.