அவர்கள் கூறியதாவது: 'பயோமெட்ரிக்' வருகை பதிவு செய்தாலும், ஊழியர்களின்
'பெர்பார்மன்ஸ்' பார்த்தே அட்டெண்டன்ஸ் தருவேன்' என்கின்றனர். 400 பேருக்கு மேல் இருக்க வேண்டிய இடத்தில் 300 பேர் வரை உள்ளதால் ஊழியர்களுக்கு பணிப்பளு அதிகரிக்கிறது. நிர்வாகமோ கடுமை காட்டி மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் பலனில்லை, என்றனர்.
கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஊழியர் பற்றாக்குறை, பணிப்பளு இருப்பது உண்மைதான். அதனால் அவசிய காரணங்களுக்காக மட்டும் விடுப்பு அளிப்பது இயல்பே. ஊழியர்களின் விருப்பம் கேட்டு பணியாற்ற கூடுதல் ஊதியம் வழங்கப்படுகிறது. பணிகள் நடப்பதற்காக சிலர் உத்தரவிடுவது கடுமையாக தெரியலாம். புதிய நியமனம் அரசின் கொள்கை முடிவு. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.