காட்பாடி: வேலுார் மாவட்டம் காட்பாடியில், கஞ்சா விற்ற ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் சனோஜ், 25. இவர் வேலுார் மாவட்டம், காட்பாடி இ.பி. அலுவலகம் அருகில், ரெஜிகேப் என்ற ஓட்டலை நடத்தி வருகிறார். இங்கு சாப்பிட வருபவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தார்.
இதனால் காட்பாடி போலீசார் அவரை இன்று (மார்ச் 18) கைது செய்தனர். காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் கல்லுாரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வேலுார் சைதாபேட்டையை சேர்ந்த பாரத், 21, ஞானசேகரன், 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.