சென்னை, கோடை விடுமுறையை ஒட்டி, 500 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கோடை விடுமுறைக்கு, மக்கள் அதிகம் வெளியூர் செல்வர் என எதிர்பார்க்கிறோம். எனவே, ஏப்ரல் இரண்டாம் வாரம் முதல், தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.
சென்னையில் இருந்து இயக்கப்படும், 2,200 பஸ்களோடு, 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பஸ்களை அதிகரித்து இயக்க உள்ளோம்.
மேலும் http://www.tnstc.in/ என்ற இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.