ஆரணி:போதையில் பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷனில், ஆரணியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 45, ஏட்டாக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த, 14 இரவில் மது போதையில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக, திருவண்ணாமலை எஸ்.பி., கார்த்திகேயனுக்கு புகார் சென்றது.
விசாரிக்க ஆரணி டி.எஸ்.பி., ரவிச்சந்திரனுக்கு அவர் உத்தரவிட்டார். ஏட்டு சத்தியமூர்த்தியை தொடர்ந்து கண்காணித்ததில், அவர் இரவு ரோந்து பணியின் போது, போதையில் இருப்பது தெரியவந்தது.
இரு தினங்களுக்கு முன், டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், ஆரணி அரசு மருத்துவமனையில் சத்தியமூர்த்திக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதில், அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சத்தியமூர்த்தியை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார்.