காட்பாடி : காட்பாடி அருகே, நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் நாய் பலியானது.
பொன்னை போலீசார் விசாரணையில், அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் அழித்து அட்டகாசம் செய்து வருவதால், விவசாயிகள் சிலர், நிலத்தின் அருகில் நாட்டு வெடிகுண்டுகளை போட்டு வைத்ததும், அதை கடித்தால் வெடிக்கும் என்பதும் தெரியவந்தது.
நாட்டு வெடிகுண்டு போட்டு வைத்தவர்கள் குறித்து, பொன்னை போலீசார் விசாரித்து வருகின்றனர்.