வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், பையை சோதனையிட்டனர். இதில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும், 16 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது.
விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நிஷாத், 32, அலின், 32 என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.