பெரம்பூர்: பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர், 36, என்பவரின் நகை கடையில், பிப்., 10ம் தேதி, 9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு, 4.50 கோடி ரூபாய்.
இந்த வழக்கில், பெங்களூரைச் சேர்ந்த வெல்டர் கஜேந்திரன், 31, திவாகர், 28, கங்காதர், 32, மற்றும் ஸ்ரீபன், 31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்; 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கங்காதரின் மனைவி கீதா, 26, மைத்துனர் ராகவேந்திரா, 25, ஆகியோரை, விசாரணைக்காக நேற்று காலை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் இருந்து, 400 கிராம் நகை மற்றும் மூன்று சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளிகளான அருண், கவுதம் ஆகியோரை தேடுகின்றனர்.