மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன், 40. இவர், ஆலத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்தார்.
நேற்று காலை 11:30 மணிக்கு, மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மூத்த மகனுடன் கோதண்டராமன், இருசக்கர வாகனத்தில் வடகடம்பாடி பகுதி கடையில் குடிநீர் கேன் வாங்க சென்றார்.
அப்போது 11 கே.வி., உயரழுத்த மின் கம்பி அறுந்து, அவர்கள் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து, அங்கேயே விழுந்து கிடந்தனர்.
குடும்பத்தினர் அவர்களை மீட்டு, மாமல்லபுரம், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் இருவரும் இறந்தது தெரிய வந்தது.
மாமல்லபுரம் போலீசார் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.