பிராட்வே: சென்னையில் ட்ரோன்களை பறக்க விட வேண்டும் என்றால் போலீசாரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 'ட்ரோன்'கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 'ஆவின்' நுழைவாயல் அருகே நேற்று முன்தினம் 'ட்ரோன்' கேமரா ஒன்று பறந்தது.
இதை பார்த்த உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் சுகுமார், உமாபதி ஆகியோர் ட்ரோன் பறக்க விட்ட மூவரை பிடித்து, எஸ்பிளனேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வித்யா சாகர், 27, விக்னேஷ்வரன், 30 மற்றும் கொருக்குப்பேட்டையைச் சூர்யா, 30, என்பது தெரிய வந்தது.
இவர்களிடம் இருந்து, ட்ரோன் கருவியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், தனியார் நிறுவன விழா ஒன்றிற்காக ட்ரோன் பறக்கவிட்டதாக போலீசில் தெரிவித்தனர். போலீசார் அவர்களை எச்சரித்து, எழுதி வாங்கி நேற்று விடுவித்தனர்.