குளித்தலை: குளித்தலையை அடுத்த, வைகைநல்லுார் பஞ்.,க்கு உட்பட 6 கிராம மக்கள் சார்பில், 8ம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தய போட்டி நடந்தது.
இதில் சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, புதிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. எம்.எல்.ஏ., மாணிக்கம், தொழிலதிபர் பி.ஆர்.பி., காந்திராஜன் ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சிறிய மாட்டுக்கு 3 மைல், பெரிய மாட்டுக்கு 6 மைல், இரட்டை மாடுகளுக்கு 8 மைல், சிறிய குதிரைக்கு 8 மைல், பெரிய குதிரைக்கு 12 மைல் தொலைவு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற குதிரை, காளை உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
சிறிய குதிரை போட்டியில் முதல் பரிசு கோவை கவுதம், 2ம் பரிசு சேலம் குமார், 3ம் பரிசு சேலம் குட்டி தனசேகர் ஆகியோர் பெற்றனர். புதுகுதிரை போட்டியில் வலங்கை தாஸ் முதல் பரிசு, ஆத்துார் எஸ்.என்., பிரதர்ஸ் 2 வது பரிசு, தொட்டியம் காவிரி 3வது பரிசு பெற்றனர். சின்ன குதிரை போட்டி
யில் குட்டப்பட்டி மனோஜ் முதல் பரிசு, கோவை மூர்த்தி 2வது பரிசு, குட்டப்பட்டி சந்துரு 3 வது பரிசு பெற்றனர்.
போட்டியில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், கோவை, வலங்கைமான், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள், குதிரைகள் கலந்து
கொண்டன.