பள்ளிபாளையம்: பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் நாசமாகின.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த திருச்செங்கோடு சாலையில், ராஜகுரு, 45, என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் நடத்துகிறார். அதன் ஒரு பகுதியில், பிளாஸ்டிக் கழிவு, பழைய இரும்பு பொருட்களை சேகரித்து வைத்திருந்தார். மற்றொரு பகுதியில், புது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்துகிறார். குடோனில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. மக்கள் தகவல்படி வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்குட்வேலு தலைமையில் வீரர்கள் சென்று, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. பள்ளிபாளையம் போலீசார், வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.