பெரம்பலுார் :அரியலுார் அருகே பூவாயிகுளம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.
அரியலுார் மாவட்டம் பூவாயிகுளம் கிராமத்தில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.
உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., பரிமளம் போட்டியைத் துவக்கி வைத்தார். முதலில், கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதைத் தொடர்ந்து அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார், விருத்தாச்சலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 640 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 250 மாடுபிடி வீரர்கள் ஐந்து குழுக்களாகப் பிரித்து களம் இறக்கப்பட்டனர்.
காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவக் குழுவினர் முதலுதவி செய்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள், பணம் வழங்கப்பட்டது.