பெரியபட்டினம் : முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியில் கல்லுரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமை வகித்தார்.
முதல்வர் ஹேமலதா ஆண்டறிக்கை வாசித்தார். அழகப்பா பல்கலை துணை வேந்தர் ஜி.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கஸ்மீர் சகாயநாதன், மாணவர்கள் படிப்பக இல்ல நிர்வாகி அந்தோணி சகாயராஜ் உட்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இளங்கலை பிரிவில் 1084, முதுகலையில் 221 பேர் என 1305 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலை அளவில் 5 முதல் ரேங்க் பெற்றவர்கள் உட்பட 53 மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முத்துப்பேட்டை கவுசானல் கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.