பரமக்குடி : பரமக்குடி மக்கள் நூலகத்தில் புத்தக திறனாய்வு கூட்டம் தலைவர் சந்தியாகு தலைமையில் நடந்தது. செயலாளர் பசுமலை, இணை செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் தமிழினி ராமகிருஷ்ணன் எழுதிய 'மண்ணின் கவிஞர் மருதகாசி' என்ற புத்தகத்தை ஆசிரியர் சீனிவாசன் திறனாய்வு செய்தார்.
ரவீந்திரன், வேலு, மனோகரன், சேவியர் வாழ்த்தினர். நிர்வாகிகள், வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.