ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இரண்டு ஆண்டிற்கும் மேலாக பயன்பாடின்றி பேட்டரி கார்'காட்சி பொருளாக உள்ளது.
புனித ஆன்மிக தலமான ராமேஸ்வரத்திற்கு ராமநாதபுரம் வழியாக தினந்தோறும் மதுரை, சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் திருப்பதி, வாரணாசி, புவனேஸ்வர், அயோத்தி உள்ளிட்ட வட மாநில நகரங்களுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம் ரயில்நிலையத்திற்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டாக பயன்பாடு இல்லாமல் பிளாட்பாரத்தில் அப்படியே காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பிளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்ல மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
அவர்களின் வசதிக்காக பேட்டரி காரை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர்.