அய்யப்பன்தாங்கல், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் 'கிருபை ஸ்டோர்ஸ்' என்ற மளிகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம், இந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் திரும்பி செல்லும் நேரத்தில், வாகனத்தில் வைத்திருந்த 'வாக்கி - டாக்கி' காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து மாங்காடு போலீசில் தீயணைப்பு அதிகாரிகள் புகார் அளித்தனர்.