அண்ணா நகர்: அண்ணா நகர் 'டவர்' பூங்காவில், 12 ஆண்டுகளுக்கு பின், கோபுர 'டவர்' நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
அண்ணா நகரின் மையப்பகுதியில், 15.5 ஏக்கர் பரப்பளவில், டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா பரந்து விரிந்துள்ளது. இங்கு, 138 அடி உயரம் மற்றும், 42 மீட்டர் அகலம் உடைய டவர் எனப்படும் கோபுரம், முதல் முதலாக 1968ல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
கோபுரத்தின் மீது ஏறி காதல் ஜோடிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தது. இதனால், கோபுரத்தில் ஏற, 2011 முதல் தடை விதிக்கப்பட்டு, பூட்டிக் கிடந்தது.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, 97.60 லட்சம் ரூபாய் மூலதன நிதியில் பூங்கா மறுசீரமைக்கப்பட்டது. அதில், கோபுர டவர் சீரமைக்கப்பட்டது. அதன் 13 தளங்களிலும் பாதுகாப்பு தடுப்புகள் அமைத்து, வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன.
சீரமைக்கப்பட்ட டவரை, நேற்று மாலை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
திறப்பு விழா மாலை, 5:00 மணிக்கு மேல் நடந்ததால், பொதுமக்கள் டவரில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால், ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அண்ணா நகர் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:சீரமைப்பு பின், 'டவர்' பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பார்வையிடுவதற்கான கட்டணம் குறித்து அரசு முடிவு எடுக்கும். தற்போது, ஒரு வாரத்திற்கு மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.காலை 7:00 மணி முதல் மாலை, 6:30 மணிவரை டவரில் ஏறி சென்னையை ரசிக்க, தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- எஸ்.சுவேதா, 23, அண்ணா நகர்