தி.நகர், தியாக பிரம்ம கான சபா மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூஷன் இணைந்து வழக்கும் 'ஸ்ரீ ராமநவமி திருவிழா - -2023' தி.நகரில் உள்ள வாணி மஹாலில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி அரங்கில் நேற்று துவங்கியது.
வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 6:30 மணிக்கு கே.எஸ்.விஷ்ணு தேவ் குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.
இதில், பக்கவாத்தியங்களாக, எல்.ராமகிருஷ்ணன் வயலின், மிருதங்கம் எஸ்.சாய்ராம், கஞ்சிரா அனிருத் ஆத்ரேயா ஆகியோர் சிறப்பித்தனர். இன்று மாலை, ப்ரியா சகோதரியரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடக்க உள்ளது.
மேலும், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மாலை 6:30 மணிக்கு கிடம்பி நாராயணன் வழங்கும் 'ஸ்ரீமத் ராமாயணம்' உபன்யாசம் நடைபெற உள்ளது.
விழாவின் இறுதி நாளான 30ம் தேதி, கிடம்பி நாராயணனுக்கு, 'பிரவஜன சுதா வாணி' என்ற விருது மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியை, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூஷன் தலைவர் தங்கம் மேகநாதன் வழங்க உள்ளார்.