சென்னை, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும், 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை நடப்பதால், நாளை மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெல்ஸ் சாலை - இந்த சாலை தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சிக்னலில் இருந்து, 'நோ என்ட்ரி'யாக செயல்படுத்தப்படும்.
பாரதி சாலை - காமராஜர் சாலையில் இருந்து, பாரதி சாலை நோக்கிச் செல்லும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் மட்டும் செல்ல வேண்டும். மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை
கெனால் சாலை - இந்த சாலை பாரதிசாலையில் இருந்து 'என்ட்ரி'யாகவும், வாலாஜா சாலை, 'நோ என்ட்ரி'யாகவும் செயல்படுத்தப்படும்
வாலாஜா சாலை - அண்ணா சாலையில் இருந்து, எம்.பி.டி.டயுள்யூ ஆகிய எழுத்துகள் உள்ள, அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால் சாலை வழியாக, அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களுக்குச் செல்ல வேண்டும்
'பி மற்றும் ஆர்' எழுத்துகள் உள்ள, அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள், வாலாஜா சாலை வழியாகவே சென்று, அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்குச் செல்லலாம்
காமராஜர் சாலை - போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக, எம்.பி.டி.டயுள்யூ ஆகிய எழுத்துகள் அனுமதி அட்டையுடன் வரும் வாகனங்கள், பாரதி சாலை வழியாக கெனால் சாலைக்கு சென்று, வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும், பொதுப்பணித்துறைக்கு எதிரே உள்ள, கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்
அனுமதி அட்டை இல்லாமல் வரும் வாகனங்கள் - அண்ணா சாலையில் இருந்து, இரு சக்கர வாகனங்கள், கார்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று, கடற்கரை உட்புற சாலைக்குச் சென்று நிறுத்த வேண்டும்
போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக சென்று, பொதுப்பணித்துறை அலுவலகம் முன் உள்ள, கடற்கரை உட்புற சாலைக்குச் சென்று நிறுத்த வேண்டும்
காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக சென்று, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு முன், கடற்கரை உட்புற சாலைக்கு சென்று நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.