திருப்பூர்:விளையாட்டுத்துறை சார்பில், தேசிய அளவிலான வெற்றி பெற்று, நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த, முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்., 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.