பல்லடம்:மேற்கு பல்லடம் ஏ.டி.காலனியை சேர்ந்த ராஜூ மகன் முருகன், 50; மாற்றுத்திறனாளி. மனைவி விஜயா, 46. மகன்கள் சரவணன் 25, ஜனகராஜ், 18, மகள் பாக்கியலட்சுமி, 22 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம், முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, குடும்பத்தினர், மாணிக்காபுரம் ரோட்டில் உள்ள சுடுகாட்டில் உடலை புதைத்தனர். ஆனால், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அருகில் வசிப்பவர்கள், முருகன் மரணம், கொலையாக இருக்கலாம் என, போலீசாருக்கு தெரிவித்தனர்.
இதனால், நேற்று, தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், டி.எஸ்.பி., சவுமியா, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் முன்னிலையில், புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.